அழகன்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
உன்னை செல்லப் பெயரால் அழைக்கும்போது
நீ…
என் கன்னம் கிள்ளுகையில்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
சாலையை கடக்கும்போது
நீ…
ஓடிவந்து என் கை பிடிக்கையில்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
என் தோளில்
நீ…
தலை சாய்த்து பயணிக்கையில்.

காதல் பாடம்

முன்னொரு நாள்
உன் ஸ்பரிசம் தொட்டு
உச்சி நுகர ஆசைப் பட்டேன்.
என்…
கன்னம் தான் பழுத்தது !

இன்றோ
உன் காதல் வெளிப்பட
குழந்தையாய்…
என்னை உச்சி நுகர்ந்தாயே !

இந்த ஒரு ஜென்மம்
போதாதடி…
உன் காதல் பாடம்
கற்றுக்கொள்ள !!!

கடைக்கண் பார்வை

அன்று வர அறியவில்லை
பெண்…
கண்ணிற்கும்
உயிருண்டென்று.

உயிர் கொண்டு
உரு கொண்டு
உன் கண்ணிரண்டும்
கரு விழித் துள்ளலோடு
கடைக்கண் பார்க்க…

இன்றுதான்…
காதலும் அறிந்தேன்
காமமும் உணர்ந்தேன்

என்னுள் நானாய்….
முழுமை
அடைந்தேன் !!!

ஏமாற்றம்

tears
கோபம் கொண்டு…
உன் கருவிழி சுருட்டி
கடைக்கண்(!) பார்ப்பாய்
என்று பார்த்தால்…
கண்ணீர் விட்டு
என்னை
கரைத்து விட்டாயே !!!

Follow

Get every new post delivered to your Inbox.