Boss (எ) பாஸ்கரன்
September 26, 2010 2 Comments
SMS (சிவா மனசுல சக்தி) படம் பிடிச்சதுன்னு லாம் சொல்ல முடியாது. ஆனாலும் பிடிக்கலன்னும் சொல்ல முடியாது. நல்ல comedy scenes. நல்ல entertainment. அந்த type comedy பிடிச்சிருந்ததால ராஜேஷ்-ன் ரெண்டாவது படமான இந்த ‘Boss (எ) பாஸ்கரன்‘ பார்க்க போனேன். இந்த தடவை படம் பார்க்கிற அனுபவமே கொஞ்சம் வித்தியாசம் தான். கிட்டத்தட்ட 6 வருஷங்களுக்குப் பிறகு college பசங்களோட சேர்ந்து படம் பார்த்தேன். Theatre full ஆ அண்ணாமலை university பசங்க தான். அப்போவே தெரிஞ்சது – படம் நல்ல இருக்கோ இல்லையோ, இன்னிக்கு பொழுது நல்லா போகும்ன்னு. நெனச்ச மாதிரியே படத்த விட அந்த environment ரொம்பவே நல்லா இருந்துச்சு. College காலங்கள் உண்மையிலேயே அருமையானவை தான்.
சரி. படத்துக்கு வரலாம்.
பெருசா விமர்சனமோ இல்ல விவரிக்கவோ அங்க பருப்பு (அட கதை தாங்க..) ஒன்னும் இல்லை. இருந்தாலும் ஒரு நாலு வரி சொல்லியே ஆகணும்னு கை துடிச்சது. படத்துல ஏகப்பட்ட comedy scenes. ஆமாங்க வெறும் comedy scenes தான் படம் முழுவதும். 30 – 40 comedy scenes மட்டும் ரெடி பண்ணிட்டு நடுல நடுல கொஞ்சம் பாட்டு லாம் சேர்த்துட்டு படத்த முடிச்சிருக்காங்க. படம் போனா நல்லா சிரிச்சுட்டு வரலாம். கவுண்டமணி – சத்யராஜ் ஜோடிக்குனு தனி ரசிகர் பட்டாளமே இருந்துச்சு. அந்த பாணில இவங்களும் ஒரு தனி genre உருவாக்க try பண்ற மாதிரி இருக்கு.

படத்த ஓட வைக்கிறதுக்கு ன்னு 2 – 3 formula தெரிஞ்சு வெச்சிருக்காங்க. SMS ல ‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு feeling‘ மாதிரி இந்த படத்துல ‘நன்பேண்டா‘ ன்னு ஒரு dialogue (!) படம் full ஆ. அப்புறம் இந்த இளசுகள impress பண்ற மாதிரி ‘உங்கள எப்டி கரெக்ட் பண்றதுன்னு சத்தியமா எனக்கு தெரிலீங்க… நீங்களே சொல்லுங்க உங்கள எப்டீங்க நான் கரெக்ட் பண்றது…‘ன்னு ஒரு dialogue. அப்புறம் சரமாரியா one-liner timing comedies… இந்த விஷயங்களோட இவங்களுக்குன்னே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கிக்கிட்டு இருங்காங்க. இதே பாணி ல இன்னும் ஒன்னு – ரெண்டு படம் ஓடத்தான் செய்யும்.
படத்துல ஆர்யா தான் hero ன்னு சொன்னங்க. இந்த டூயட் songs மட்டும் இல்லன்ன சந்தானம் தான் hero ஆயிருப்பாரு
. படத்த அப்படி தூக்கி நிப்பாட்டி இருக்காரு. அப்புறம் இன்னொரு புது trend. என்னடா climax வைக்கலாம் ன்னு உட்காந்து யோசிக்க தேவையே இல்ல. ரொம்ப simple ஆ இயக்குனரே வந்து பேசி படத்தை முடிச்சு வெச்சுட்டாரு. எப்படிப்பா உங்களுக்கு இப்படி லாம் யோசிக்க தோணுது.
ஹீம். பாருங்க… பாருங்க… பார்த்து இந்த படத்த நீங்களும enjoy பண்ணுங்க.

Recent Comments