கதை சொல்லுங்களேன் ப்ளீஸ்…

எப்பொவும் போல தான் அன்னிக்கும் இந்த பஸ் பயணம் ஆரம்பமாச்சு… பெங்களுருல இருந்து எங்க ஊருக்கு போறதுங்கறது ஒரு முழு night தூக்கத்த தாரை வார்த்துக் குடுக்கிற மதிரி தான். வழக்கம் போல Shanthi nagar bus stand ல அரை மணி முன்னதாவே போய் நின்னுட்டேன். ஏற்கனவே ரெண்டு நாள் தூக்கம் கண்ணைக்கட்டி வர… அரை உணர்ச்சில தான் நின்னுட்டு இருந்தேன்.

நம்ம bus வந்தவுடனே முதல் ஆளா ஏறிப்போய் உட்கார்ந்து தூக்கத்துக்குத் தயாரானேன். இந்த மாதிரி பயணங்களில் எல்லாம் கடந்த ஒரு வருஷமா காதுல MP3 Player ஒன்னோட Headset அ மாட்டிட்டே தான் பயணம் செய்றது வசக்கமாயிட்டது. நம்ம தூங்கினாலும் அந்த பாட்டு கேக்குற பொட்டிய மட்டும் தூங்க விடறதே இல்ல.

அந்தா இந்தான்னு வண்டி நகர மேலும் ஒரு 30 நிமிஷம் ஆக, அப்படியே லேசா கண்ணசர ஆரம்பிச்சேன்… கள்வரே கள்வரே பாட்டு மெதுவா கசிய தாலாட்டு ஆரம்பமாச்சு. அடுத்ததா கேளடி கண்மனி கேட்ட மாதிரி ஒரு feel… தூங்கிட்டேன்னு நினைக்கிறேன்.

ஏதோ ஒரு லாரிக்காரன் புண்ணியவான் சத்தமா ஹாரன் (அது ஹாரனா இல்ல சைரன்-னான்னு கடவுளுக்குத் தான் தெரியும்) அடிக்க நம்ம தூக்கம் போயே போச்சு. அப்புறம் வரிசையா 10-15 பாட்டு கேட்டு முடிச்சுட்டேன், தூக்கமே வரல… இப்போ தான் லைட்டா தலை வலி ஆரம்பமாச்சு. இந்த தலை வலிக்குக் காரணம் தூக்கம் கெட்டதா, இல்லை இந்த பாட்டு எல்லாம் சேர்ந்து ஏதோ செய்யுதான்னு ஒரே குழப்பம். ஆஹ தலை வலி இன்னும் அதிகமாயிடுச்சு.

இன்னும் (விஷயம்) ஒண்ணுமே வரலையேன்னு வடிவேலு மாதிரி நீங்க கேக்குறது புரியுது. சரி விசயத்துக்கு வாறேன். நான் இப்போ கேட்ட பாட்டு எல்லாம் சேர்ந்து ஏதோ கதை சொல்ற மாதிரி ஒரு feel. ஆனா என்ன கதைன்னு தான் தெரியல. அந்தக் கதை என்னன்னு யோசிச்சு யோசிச்சு தான் தலை வலி வந்துடுச்சு. இதுல பாட்டு சேர சேர வலி அதிகமாயிட்டே போயிடுச்சு. கீழ இருக்கிறது தான் அந்தப் பாட்டு list.

கள்வரே கள்வரே – ராவணன்
கேளடி கண்மணி – புதுப் புது அர்த்தங்கள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்
Fashion का जलवा – Fashion
மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
எங்கெங்கோ கால்கள் – நந்தா
ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு – உழவன்
ॐ मंगलम – कमबख्त इश्क
அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம்
மாரீச்சம் யாதோ – சில்லுனு ஒரு காதல்
Theme of fashion – Fashion
ಗುಡುಗುಡಿಯ ಸೇದಿ ನೋಡು
சங்கீத ஜாதி முல்லை – காதல் ஓவியம்
the cholan ecstacy – ஆயிரத்தில் ஒருவன்
கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள்
இளமை உல்லாசம் – உன்னாலே உன்னாலே
मिले सुर
கண்ணில் தாகம் தீருமோ – அச்சமுண்டு அச்சமுண்டு
என் உயிரே – Bombay
ಮುಂಜಾನೆ ಮಂಜಲ್ಲಿ - Just Math Mathalli
விடிகின்ற பொழுது - ராம்
ஒ மனமே – உள்ளம் கேட்குமே
பிள்ளை நிலா – நீங்கள் கேட்டவை
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம்
நான் அலிபாபா தங்கம் – பொல்லாதவன்
हे भगवन
ராஜா ராஜா சோழன் - ரெட்டை வால் குருவி

என்னடா இவன் 10-15௦ ன்னு சொல்லிட்டு 25-30௦ க்கு மேல list போட்டிருக்கான்னு பாக்குறீங்களா?
அப்பப்போ துக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது ஒரு 2-3 பாட்டு மனசுல பதிஞ்சிட்டது, அதான் list எகிறிட்டது. இப்படியே நைட் full a ஓட்டிட்டாலும், காலைல வீடு வந்து சேரும் வரை அந்த கதை மட்டும் புடி படவே இல்லை.

யாராச்சும் அந்த கதை என்னன்னு கண்டு பிடிச்ச சொல்லுங்களேன் ப்ளீஸ்…

உட்காந்து யோசிப்பாய்ங்களோ ன்னு நீங்க சொல்றது கேட்குது :-)

தமிழ்… தமிழன்… Part 2

சென்ற பதிவையே கொஞ்சம் (கொஞ்சம் தான்) தூய தமிழில் முயற்சி செய்தேன்…

இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையா, இல்லை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையா என்று கேட்டால் நிறைய பேர் கொஞ்சம் குழம்பித்தான் போவார்கள். இந்தியாவின் தனித்தன்மை இது என்று கூட சொல்லலாம். இது எல்லா மாநிலத்தவருக்கும் பொருந்தும்.

சரி நம் விஷயத்திற்கு வருவோம்…

சிறிது வருத்தம் நிறைய பயம்… தமிழன் என்று சொல்லிக்கொள்ள என்ன அடையாளம் என்னிடம் இருக்கின்றது என்று யோசிக்கும் அளவு தமிழை விட்டு விலகிய ஒரு பிரம்மை.

திடீரென்று சில தமிழ் இலக்கிய வரிகளை படிக்க முயற்சி செய்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நன்றாகவே திணறிவிட்டேன் படிப்பதற்குள். அர்த்தம் புரிந்ததா இல்லையா என்பது அடுத்த விஷயம்… முதலில் ஒரு கோர்வையாக படிக்க முடிந்ததா என்றால்…. அதுவே முடியவில்லை.
அப்பொழுது தான் இந்த பயம் வந்தது.

காரணம் இல்லாமல் இல்லை. 5 வருடமாக கணினித்துறையில் இருக்கின்றேன். பேசுவது, பழகுவது, ஏன் வாழ்வது முழுவதும் ஆங்கிலம் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல், 3 வருடங்களாக இங்கு தமிழ்நாட்டை விட்டு வெளியில் வேறு… ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 அல்லது 3 மணிநேரம் தமிழில் பேசுவேன்; தமிழ் படிப்பது – கிட்டத்தட்ட சைபர்…
தமிழில் ஆர்வம் உள்ள என்னைப் போன்றவர்களுக்கே இப்படி என்றால… அடுத்த தலைமுறையை நினைத்தால… ஹூம்… “மெல்லத் தமிழ் இனிச் சாகும்”…. எங்கோ அசரீரி கேட்கிறது. இதற்குத் தீர்வு தான் என்ன?

இப்படி நினைத்துக்கொண்டே அன்று தூங்கிவிட்டேன் !!!

அப்பொழுது தான் இந்த பயம் வந்தது.
காரணம் இல்லாமல் இல்லை. 5 வருடமாக கணினித்துறையில் இருக்கின்றேன். பேசுவது, பழகுவது, ஏன் வாழ்வது முழுவதும் ஆங்கிலம் என்றே சொல்லலாம். அது மட்டும் இல்லாமல், 3 வருடங்களாக இங்கு தமிழ்நாட்டை விட்டு வெளியில் வேறு… ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 அல்லது 3 மணிநேரம் தமிழில் பேசுவேன்; தமிழ் படிப்பது – கிட்டத்தட்ட சைபர்…
தமிழில் ஆர்வம் உள்ள என்னைப் போன்றவர்களுக்கே இப்படி என்றால… அடுத்த தலைமுறையை நினைத்தால… ஹூம்… “மெல்லத் தமிழ் இனிச் சாகும்”…. எங்கோ அசரீரி கேட்கிறது. இதற்குத் தீர்வு தான் என்ன?
இப்படி நினைத்துக்கொண்டே அன்று தூங்கிவிட்டேன் !!!

தமிழ்… தமிழன்…

தமிழ்… தமிழன்…இந்தியன்னு சொல்லிக்கிறது பெருமையா, இல்ல தமிழன்னு சொல்லிக்கிறது பெருமையான்னு கேட்டா நிறைய பேர் கொஞ்சம் குழம்பித்தான் போவாங்க. இந்தியாவோட Speciality இதுன்னு சொல்லலாம். இது எல்லா மாநிலத்தவருக்கும் பொருந்தும்.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்…

கொஞ்சம் வருத்தம் நிறைய பயம்… தமிழன்னு சொல்லிக்கிற அடயாளம் என்கிட்ட என்ன இருக்குன்னு யோசிக்கிற அளவுக்கு தமிழ விட்டு விலகிட்ட மதிரி ஒரு feeling.

திடீர்ன்னு சில தமிழ் இலக்கிய வரிகள படிக்க முயற்சி பண்ணினேன். உண்மைய சொல்லணும்னா, ரொம்பவே திணறிட்டேன் படிக்றதுக்குள்ள. அர்த்தம் புரிஞ்சுதா இல்லையாங்கிறது அடுத்த விஷயம்… முதல்ல ஒரு கோர்வையா படிக்க முடிஞ்சதான்னா… அதுவே முடியல…
அப்போ தான் இந்த பயம் வந்தது.

காரணம் இல்லாமல் இல்ல. 5 வருஷமா Software-ல இருக்கேன். பேசுறது, பழகுறது, ஏன் வாழ்றது முழுசும் English-னே சொல்லலாம். அது வேற இல்லாம, 3 வருஷமா இங்க தமிழ்நாட்ட விட்டு வெளில வேற… ஒரு நாளுக்கு maximum 2-3 மணிநேரம் தமிழ் பேசுவேன்; தமிழ் படிக்கிறது – கிட்டத்தட்ட Zero…
தமிழ்ல ஆர்வம் உள்ள என்ன மாதிரி ஆளுங்களுக்கே இப்டினா… அடுத்த GஏணேறாTஈஓண நெனெச்சா… ஹூம்… “மெல்லத் தமிழ் இனிச் சாகும்”…. எங்கோ அசரீரி கேக்குது. இதற்குத் தீர்வு தான் என்ன?

இப்டி நெனெச்சுட்டே அன்னிக்குத் தூங்கிட்டேன் !!!

பூச்சாண்டி வரான் பாரு

குழந்தைகள் எப்போதுமே குதூகலத்தை உண்டாக்குவர் என்பது உண்மைதான்.

வேலை வேலை என்று மூளையை நசுக்கும் இந்தக் கொரியா வாழ்கையில் இன்று கொஞ்சம் நிம்மதி. அதிசியமாக அளவாக வேலை பார்த்து வெளியே வந்தேன். அந்த 7.30 மணி மாலை (இன்னும் சூரியன் மறையவில்லை) நடை இன்று தான் முடிந்தது (50 நாளில்).

சரி விசயத்துக்கு வருவோம். Apartment Park இல் குழந்தைகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எங்கள் நால்வரைப் (எல்லோரும் இந்தியர்கள்) பார்த்தும் கையை நீட்டி எதோ கத்திக்கொண்டு ஓடின.

சின்ன வயதில் அம்மா சாலையில் வருவோரைக் காட்டி ‘பூச்சாண்டி வரான் பாரு’ என்று பயமுறுத்தி சோறு ஊட்டியது நினைவுக்கு வர மனசு லேசாகியது. மனதுள் சிரித்துக்கொண்டே நடந்தோம். 

Follow

Get every new post delivered to your Inbox.