அன்பே வா‘ கவிதைகள்…


உலகெல்லம் ஓடி
உன் காதல் நீ தேட…
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்
நீ தான் நான் என
நான் கண்டுகொண்டேன்…
நான் தான் நீ என
நீ அறிவதெப்போது…

********************************

வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்

உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்…
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்

நீயே சொல்லிவிடேன்…

காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை…

வழிமொழிந்தாவது
விடுகிறேன்

********************************

எல்லாம் ‘அன்பே வா‘ கவிதைகள்…
Thanks to Vijay TV and Anbe Va

ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம சில விசயங்களை நம்பித்தான் ஆகணும்

ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம சில விசயங்களை நம்பித்தான் ஆகணும்” – ‘மொழி’ படத்தின் ஒரு வசனம். வாழ்வின் நிறைய நிகழ்வுகள் இப்படித்தான் இருக்கின்றன.

உண்மை

உண்மைங்கறது பெரும்பாலானவங்க ஒப்புத்துக்ற பொய்‘ – என்னுடைய மனதை ரொம்பவே பாதித்த வரிகளுள் இதுவும் ஒன்று.

சுஜாதா வின் ஒப்பற்ற நாவல்களில் ஒன்றான  “பிரிவோம்… …சந்திப்போம்“  இல் வரும் இந்த வசனம். அமெரிக்க வளர்ப்பில் ஏமாந்த ரத்னா ரகுவிடம் பேசுவதாக வரும் இந்த வாக்கியம் உண்மையிலேயே உண்மை தான்.

‘சில விஷயங்கள சீக்கிரமே பண்ணிடனும் சார்…’

‘சில விஷயங்கள சீக்கிரமே பண்ணிடனும் சார்’…
என்னுடைய மனதை ரொம்பவே பாதித்த வரிகளுள் இதுவும் ஒன்று. ‘ஆனந்த விகடன்‘ இதழ் ஒன்றில் ‘பொல்லாதவன்‘ பட இயக்குனர் வெற்றிமாறனின் நேர்காணலில் அவர் வருத்தப்பட்டுச் சொன்னதாக இடம்பெற்ற வாக்கியம் இது. காரணம் : தன் முதல் பட வெற்றியைப் பார்த்து சந்தோஷப்பட அவர் தந்தை உயிரோடு இல்லாதது தான்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள். வாழ்க்கையில் ரொம்பவே போராடி வெற்றி பெற்றவர்களுள் பலர் இப்படி நினைப்பது உண்மைதான். போராடித் தோற்றவர்களும் சில நேரம் இப்படி வருத்தப்படுவது இயல்பு தான். இரண்டுக்குமே காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

Follow

Get every new post delivered to your Inbox.